துருக்கியில் விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து : 66 பேர் பரிதாபமாக பலி
துருக்கியில் (Türkiy) விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருகையில், துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில், சுமார் 12 மாடிகளைக் கொண்ட உணவு விடுதி மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது.
பயங்கர தீ விபத்து
தற்போது துருக்கியில் இரண்டு வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்த விடுதியில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து விடுதியில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும் அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து பல்வேறு மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |