சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை – புதிய அரசின் நடவடிக்கை
புதிய இணைப்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் (Srilankan airlines) விமான சேவை நிறுவனத்திற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு, தனியார் துறை முதலீடுகள் தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனை
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனை செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.
அரசாங்கம் வேறு மாற்று வழிகளைக் கண்டறிய செயற்பட்டு வருவதாகவும் சிறிலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்கம் ஒரு புதிய இயக்குநர்கள் குழுவை நியமித்துள்ளது.
அதை எவ்வாறு திறமையாக நிர்வகிக்க முடியும் என்பதை ஆய்வு செய்யுமாறு புதிய குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
2023 ஆம் ஆண்டில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் (srilankan airlines) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், 2022ஆம் ஆண்டில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது.
பில்லியன் இலாபம்
2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 617 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்தது.
2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298 பில்லியன் இழப்பைச் சந்தித்தது.
2023ஆம் ஆண்டில் 61 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |