காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் - குற்றச் செயலுக்கு பின்னணியில் வெளிநாட்டவர்
துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டில் கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (30) அலோபோமுல்ல பிரதேசத்தில் வைத்து 22, 24 மற்றும் 25 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுளனர்.
கடந்த 3ம் திகதி நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து களுத்துறை குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குற்றச்செயல்
குறித்த வீட்டில் இருந்த 75,000 ரூபா பெறுமதியான 02 தங்க மோதிரங்களையும் 25,000 ரூபா பெறுமதியான 03 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வான், உந்துருளி மற்றும் 02 போலி இலக்கத் தகடுகளுடன் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் குறித்த வாகனங்களைப் பயன்படுத்தி இவ்வாறான குற்றச் செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் மேற்கொள்வதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்படி மேலும் 03 வான்களும் 03 உந்துருளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரால் இந்த குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
