சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்

Saudi Arabia World
By Sathangani Oct 11, 2026 05:27 AM GMT
Report

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த தாக்குதலில் 309 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியாத் விமான நிலைய முனையத்தில் பாரிய தாக்குதல்! பலர் காயம்

ரியாத் விமான நிலைய முனையத்தில் பாரிய தாக்குதல்! பலர் காயம்

விமானங்கள் ரத்து

சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவுதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்தான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலையடுத்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம் | Houthi Attack On Saudi Airport Kills 12

ரியாத்துக்கான அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானச் சேவை கண்காணிப்புத் தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

குவைத் ஏர்வேஸ் உட்பட பல வளைகுடா விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதலை ஹூதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி, இது ஒரு முழுமையான போர்க் குற்றம் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கடுமையான கண்டனம்

அத்துடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தனது நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, சவுதியில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் ஆகியவை, நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

சவுதி விமான நிலையம் மீதான தாக்குதல் : 12 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம் | Houthi Attack On Saudi Airport Kills 12 

யேமனில் சவுதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், அந்த நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் அண்மைய நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக சவூதியின் இரு விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

அதற்கு முன்னதாக கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் மூவர் பலியாகியிருந்தனர். சனிக்கிழமையன்று தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் எறிகணை ஒன்று விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.

சவுதி அரேபியா தனது கடல் எல்லைகளில் விதித்துள்ள முற்றுகைக்கும், ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தின் மீதான வான்வழித் தாக்குதலுக்கும் பதிலடியாகவே சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி