சர்வதேச கடல் வணிகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஹவுதி
ஹவுதி படையினரின் தொடர் தாக்குதலினால் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயின் வர்த்தகப்போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா வின் வர்த்தகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, சூயஸ் கால்வாயில் வா்த்தகப் போக்குவரத்தானது ஏறத்தாழ 42 சதவீதம் சரிந்துள்ளதாக ஐ.நா.வின் வா்த்தகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றினையும் அந்த அமைப்பின் தலைவா் ஜோன் ஹாஃப்மன் வெளியிட்டுள்ளார்.
கடல் வணிகம் பாதிக்கப்படும்
அந்த அறிக்கையில், "சா்வதேச அரசியல் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் இதுபோல் கடல் வணிகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு கடல் வணிகம் பாதிக்கப்படுவதனால் உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் விளைவாக உலக பொருளாதாரமும் பெருமளவில் வீழ்ச்சியடையும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் முறியடிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளா்ச்சிப் படையினா் செங்கடல், அரபிக்கடல் மற்றும் மத்தியதரைக்கடலில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சர்வதேச கடல் வணிகத்தை பேணும் நோக்கிலும் அமெரிக்கா தலைமையில் 12 நாடுகள் ஹவுதி படையினரின் தாக்குதல்களை முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |