இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் கப்பல் திடீர் தாக்குதல்! பின்னணியில் ஹூத்தி
இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு கப்பலை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று (10) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது செங்கடல் பகுதியில் உள்ள பிரான்ஸ் நாட்டு போர்க்கப்பல் அதனை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த ட்ரோன்கள் யேமன் நாட்டின் கடற்பகுதியில் சுமார் 110 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து ஏவப்பட்டதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்ற நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக பல அரபு நாடுகள் செயற்படுகின்றன.
அதேபோன்று ஈரான் ஆதரவாளர்களான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் கடற்பகுதி வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |