அமெரிக்கா - பிரித்தானியாவுக்கு ஹவுதி விடுத்த பகிரங்க எச்சரிக்கை
ஏமன் நாட்டை விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களை கண்டிக்கும் முயற்சியில் செங்கடல் வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது ஹவதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
தாக்குதல்
அதன்பின்னர் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களின் மீது கடந்த 11 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்தனர்.
அத்துடன், மீண்டும் அண்மையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் இணைந்து ஈரானுடன் இணைந்த குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
ஹவுதியின் உத்தரவு
இந்நிலையில், ஒரு மாத கால அவகாசத்திற்குள் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இருக்கும் அதிகாரிகளில், பிரித்தானிய குடியுரிமை கொண்டோர் மற்றும் அமெரிக்க குடியுரிமை கொண்ட அதிகாரிகள் உடனடியாக ஏமனை விட்டு வெளியேறுமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த தகவலை ஐக்கிய நாடுகள் சபை செய்தி நிறுனமான AFP உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |