கனேடிய மாணவர் விசா காலத்தில் மாற்றம்: எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
கனாடவிற்கு கல்வி கற்பதற்காக வருகை தரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவின் காலத்தை குறைப்பதற்கு கனேடிய அரசு தீர்மானித்துள்ளது.
கல்வி கற்பதற்காக வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசு
இந்நிலையில், கனேடிய மாணவர் விசாவின் காலம் இரண்டு வருடங்கள் என கனேடிய அரசு நிர்ணயித்துள்ளது.
தொடர்ந்தும் மார்க் மில்லர் கூறுகையில், கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன.
மாணவர் விசா
2023-ம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம்.
இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும் என்றும் அவை இரண்டு ஆண்டுகள் வரை மாத்திரமே செல்லுபடியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |