இஸ்ரேலை யாராவது காயப்படுத்தினால் அவர்களை இஸ்ரேல் திரும்பவும் காயப்படுத்தும்
'இஸ்ரேலை யாராவது காயப்படுத்தினால், அவர்களை இஸ்ரேல் திரும்பவும் காயப்படுத்தும்- பலமான முறையில்'..
கடந்த சனிக்கிழமை ஹெளத்திக்கள் மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதனியாகு விடுத்திருந்த அறைகூவல் இது.
இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை ஹெளத்திகள் மேற்கொண்ட வெற்றிகரமான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, யெமனில் உள்ள ஹெளத்திக்களின் நிலைகள் மீது கடுமையான விமானத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது இஸ்ரேலின் விமானப்படை.
இஸ்ரேலின் நவீன குண்டுவீச்சு விமானங்கள் மேற்கொண்ட அந்தத் தாக்குதலைத் தொடர்ந்துதான், இஸ்ரேலின் பிரதமர் இந்த அறைகூவலை விடுத்திருந்தார்.
ஆனால், இஸ்ரேலின் டெல்அவிவ் நகர் மீது ஹெளத்திக்கள் மேற்கொண்டிருந்த தாக்குதலின் பின்னணியில் பேசப்படாத சில செய்திகளும் இருக்கின்றன.
அந்தச் செய்திகள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: