சவுதியின் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்த ஹவுதிகள்
Saudi Arabia
World
By Pavi
சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் அமைந்துள்ள சவுதி அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணி, நேற்று (26) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளான புதன்கிழமை, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் ஹூதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சவுதி அரேபியா
யேமன் எல்லைக்கு அருகிலுள்ள சவுதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி