சவுதியின் பல விமான நிலையங்களை குறிவைக்க போகும் ஹவுதிகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் விமான நிலையங்களை இலக்கு வைத்துள்ள நிலையில் மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்தியகிழக்கு தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
விமான நிலையங்களைத் தாக்கப் போவதாக ஹவுதிகள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யேமன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நகர்வை ஹவுதிகள் கையில் எடுத்துள்ளனர்.
ஹவுதிக்களின் தாக்குதல்
யேமனின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் வடக்கிலுள்ள மரிப் உள்ளிட்ட இடங்களில் அன்சார் அல்லாஹ் எனப்படும் ஹவுதி அமைப்பின் நிலைகள் மீது சவூதி அரேபியா தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக மேலும் பல சவூதி விமான நிலையங்கள் ஹவுதிக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |