இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது எப்படி...! வெளியானது காணொளி
கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்திய ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை அடுத்து வெகுண்டெழுந்துள்ள இஸ்ரேல் கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலால் நாளாந்தம் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பலம் மிக்க உளவு அமைப்பான மொசாட் எனும் படைப்பிரிவை வைத்திருக்கும் இஸ்ரேலின் கண்ணில் மண்ணைத்தூவி ஹமாஸ் அமைப்பு எப்படி தாக்குதல் நடத்தியது. அதுதொடர்பான தகவல் தற்போது வெளிவந்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை குழப்பிய ஹமாஸ்
இஸ்ரேலில் இருக்கும் Iron Dome தொழில்நுட்பமானது அமெரிக்காவில் இருக்கும் வான்வெளி பாதுகாப்புக்கு இணையான ஒன்றாகும். இந்த தொழில்நுட்பத்தை மீறி ஏவுகணை அல்ல.. ஒரு துப்பாக்கி தோட்டா எல்லையை தாண்டினாலும் இது காட்டிக் கொடுத்துவிடும்.
இதனை தெரிந்து வைத்திருந்த ஹமாஸ் படையினர், இந்த தொழில்நுட்பத்தை குழப்ப திட்டமிட்டனர்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏதேனும் பொருளை யாராவது திருடிச் சென்றால் வாசல் அருகே வைத்திருக்கும் இயந்திரத்தில் சத்தம் வரும். Iron Dome தொழில்நுட்பத்தை இதனுடன் ஒப்பிட்டு ஸ்கெட்ச் போட்டது ஹமாஸ்.
சக்தி குறைந்த ஏவுகணைகளை
அதாவது, ஒரு பொருளை திருடிக்கொண்டு யாராவது சென்றால் சூப்பர் மார்க்கெட் இயந்திரம் சத்தம் கொடுக்கும். காவலாளிகள் அந்த நபரை பிடித்து விடுவார்கள். அதுவே, எல்லோரும் செல்லும் போது இப்படி சத்தம் வந்தால், அந்த இயந்திரத்தில் ஏதேனும் பழுது என்று நினைத்துக் கொள்வார்கள். அதே பாணியை தான் ஹமாஸ் படையினர் கடைப்பிடித்துள்ளனர்.
அதன்படி, முதலில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்தி குறைந்த ஏவுகணைகளை ஹமாஸ், இஸ்ரேல் எல்லைக் கிராமங்கள் மீது வீசியுள்ளது. அப்போது ஒரே நேரத்தில் அனைத்து Iron Dome தொழில்நுட்பங்களும் சத்தம் கொடுக்க, ஏதோ தொழில்நுட்ப கோளாறு என இஸ்ரேல் இராணுவத்தினர் நினைத்துள்ளனர்.
அதன் பின்னர், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து வீசியுள்ளனர் ஹமாஸ் படையினர். இப்போதும் Iron Dome சத்தம் கொடுத்திருக்கிறது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் பல திசைகளில் இருந்து வந்ததால் எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் Iron Dome தொழில்நுட்பமும் குழம்பிப் போய்விட்டது.
ஹமாஸ் அமைத்த மாதிரி கிராமம்
இதை தங்களுக்கு சாதகமாக ஆக்கிய ஹமாஸ் படையினர், அடுத்தடுத்து ஒரே நேரத்தில் 7000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் நகரங்களை சின்னாபின்னமாக்கி உள்ளனர். இந்த தாக்குதலால் உஷார் அடைந்த இஸ்ரேல் இராணுவத்தினர், ஏவுகணைகள் தாக்கிய இடத்தை நோக்கி விரைய, ஹமாஸ் படையினரோ காசாவை ஒட்டியுள்ள இஸ்ரேலின் கிபுட்ஸ் கிராமத்தில் உள்ள பாதுகாப்பு சுவரை குண்டுவைத்து தகர்த்து நுழைந்துள்ளனர்.
மேலும், கிபுட்ஸ் கிராமத்தின் அமைப்பை போலவே காஸாவில் ஏற்கனவே ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கி, அதில் பயிற்சி பெற்றதால் அந்த கிராமத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நுழைந்து தாக்குதல் நடத்தி, அங்குள்ள மக்களை பணயக் கைதிகளாகவும் ஹமாஸ் படையினரால் எளிதாக பிடிக்க முடிந்துள்ளது.