நாட்டில் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை
Lemon
Sri Lanka
Vegetables
By Shalini Balachandran
ஒரு கிலோ எலுமிச்சையின் மொத்த விற்பனை விலை ரூபாய் 2,000 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விலை அறிவிப்பை கெப்பட்டிபொல பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், நாட்டிலுள்ள பல பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ எலுமிச்சை ரூபாய் 1,950 முதல் ரூபாய் 2,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.
எலுமிச்சை விலை
இந்த நாட்களில் எலுமிச்சை அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளதாக காய்கறி வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எலுமிச்சை விலை அதிகரித்து வருவதால், சிலர் மோசமான நிலையில் உள்ள மற்றும் நல்ல நிலையில் இல்லாத சிட்ரஸ் பழங்களை கூட விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்