8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை
Sri Lanka Army
Presidential Secretariat of Sri Lanka
President of Sri lanka
Money
By Sathangani
ஜனாதிபதி செயலகத்தின் (Presidential Secretariat) கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காகக் கடந்த 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 கோடியே ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 422 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் உள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக
பாதுகாப்புப் பிரிவினர்
ஜனாதிபதி மாளிகைகள் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கண்டி, மஹியங்கனை, நுவரெலியா, கதிர்காமம், பெந்தோட்டை, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்த எட்டு மாளிகைகளிலும் 392 பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் 16 சிவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்