உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள்

Skin Care
By Beulah Aug 13, 2023 06:42 AM GMT
Report

உடல், கழுத்து, கை, கால்கள் என ஒவ்வொரு நிறமும் சிலருக்கு மாறியிருக்கும். எல்லா நிறமும் ஒரே மாதிரியாக இருந்தால் தான் சருமநிறம் பொலிவாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலும் எல்லோரும் வெளியில் செல்வதால் ஆடைகள் தவிர்த்து சருமம் வெளிப்படும் நிறம் கருப்பாக, கடினமாக தெரியும்.

சிலர் நல்ல நிறமாக இருந்தாலும் சூரிய ஒளி உடலில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருப்பதை பார்க்கலாம்.

சற்று கவனமுடன் இருந்தால் இதை சரிசெய்யலாமாம். இப்பதிவின் மூலமாக எவ்வாறு இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என பார்க்கலாம்.

கருமை நிறத்துக்கு என்ன காரணம்

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்வது இதற்கு முதல் காரணமாக சொல்லலாம்.

குடை, சன்ஸ்க்ரீன், துப்பட்டா என எதுவுமே இல்லாமல் செல்லும் போது அந்த பாதிப்பு சருமத்துக்கு ஏற்படுகிறது.

ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடலில் படும் போது சருமம் கருமையாகவும் அதிக வயதான தோற்றத்தையும் அளிக்கிறது.

அழகின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இது அதிக வருத்தத்தை காட்டும்.

தண்ணீரும் சருமத்தை கருமையாக மாற்றலாம்

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

உப்பு தண்ணீரில் குளிக்கும் போது அதன் உப்பு சருமத்தில் படிந்து கருமை ஆகும்.

நீச்சல் குளத்தில் குளோரின் தண்ணீர் போன்றவற்றில் குளிக்கும் போதும் சருமத்தின் நிறமும் மாறும்.

சில பெண்கள் பிசிஓஎஸ், ஹார்மோன் பிரச்சனை போன்றவற்றுக்காக மருந்துகள் எடுப்பார்கள். இத்தகைய மருந்துகள் எடுப்பது கூட சருமத்தில் கருந்திட்டுக்களை உண்டு செய்யலாம்.

கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள்

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

சிலர் கெமிக்கல் கலந்த கடினமான பொருட்கள் அதாவது தடை செய்யப்பட்ட இராசயனம் கலந்த பொருள்களை பயன்படுத்துவார்கள்.

இதனால் சருமம் பாதிக்கப்பட்டு கருமை நிறமாக மாறலாம். முதலில் பொலிவாக இருப்பது போன்று தோன்றினாலும் நாளடைவில் இவை சருமத்தில் மோசமான பாதிப்பை உண்டு செய்யலாம்.

கடினமான அழகு பொருள்களை பயன்படுத்துவது, மேக் அப் போட்டாலும் அதை வீட்டுக்கு வந்து கலைக்காமல் அப்படியே படுத்துவிடுவது, நகங்கள் படுவது, கைகள் அழுக்குடன் சருமத்தில் படிவது, முகக்கண்ணாடி கன்னங்களின் மீது படிவது என எல்லாமே சருமத்தின் நிறமாற்றத்தை உண்டு செய்யலாம்.

ஹேர் டை பயன்பாடு சருமத்தில் கருந்திட்டுகளை உண்டு செய்யுமா?

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

ஹேர் கலர் அடிக்கடி போட வேண்டாம். அதிலும் அமோனியா, பிபிடி இல்லாதவற்றை தான் பயன்படுத்த வேண்டும்.

அடிக்கடி போடாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இலேசான டச் அப் செய்தால் கூட போதுமானது.

சிலருக்கு கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். சிலருக்கு நெத்தி மட்டும் கருப்பாக இருக்கும்.

இவர்கள் அனைவருக்கும் சரும பரிசோதனை செய்து உரிய காரணங்களை அறிந்து சிகிச்சை அளித்தால் கருந்திட்டு மறையும்.

கருந்திட்டுக்கள் இருப்பவர்கள் போட வேண்டிய பேக் ஒன்று இப்போது பார்க்கலாம்.

பிக்மெண்டேஷன் போக்கும் பேக் -1

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

முல்தானிமிட்டி - 2 டீஸ்பூன்

கிளிசரின் - அரை டீஸ்பூன்

பன்னீர் - தேவைக்கேற்ப

அனைத்தையும் குழைத்து கருந்திட்டு இருக்கும் இடங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

பிறகு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் கருமை குறையும்.

பிக்மெண்டேஷன் போக்கும் பேக் -2

உடலில் வெயில் படும் இடங்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது என்று கவலைப்படுகின்றீர்களா - இதோ சில எளிமையான வழிமுறைகள் | How To Get An Even Skin Tone Tamil

கடலை மாவு -2 டீஸ்பூன்

தயிர் - அரை டீஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் - 1 சிட்டிகை

இந்த மூன்றையும் கலந்து கருந்திட்டுக்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்தால் கருந்திட்டுக்கள் மறையும்.

இது சருமத்தையும் பொலிவாக வைக்கும்.

மேற்சொன்ன இந்த இரண்டு பேக் தினசரி செய்ய வேண்டியதில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் போதும் கருந்திட்டுக்கள் மறையும்.

இதனோடு வெயிலில் செல்லும் போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். பழங்கள், காய்கறிகள் என்று சருமத்துக்கு ஊட்டமளிக்கும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

கருந்திட்டுக்கள் மறைந்து அழகான சருமத்தை பெறுவீர்கள்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025