கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களுடைய அழகினை மேம்படுத்த பலவகையான அழகு குறிப்புகளை பின் பற்றி வருகின்றனர்.
கை கால்களில் உள்ள கருமையை கவனிக்க தவறவிடுகின்றனர். சிலருக்கு உடலின் சருமம் வெள்ளையாக இருந்தாலும், கைமுட்டி, கால்முட்டி, முழங்கால் முட்டிகள் கருமையாக இருக்கும்.
இந்த கருமை எவ்வளவு தேய்த்து குளித்தாலும் மறைய வைப்பது கடினமாக இருக்கும். இந்த கருமையை எப்படி சரி செய்வது என்று இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்
சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் கோப்பி பவுடர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறைந்த பகுதியில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சில நாட்களில் கருமை நிறம் மாறுவதை நீங்களே உணர முடியும்.
முல்தானி மெட்டி
ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு புத்துணர்வு ஊட்டுகிறது. சருமத்தை பொலிவாக்குகிறது.
கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி கை மற்றும் கால் மூட்டுகளில் தினமும் இரவு நேரங்களில் மசாஜ் செய்துவிட்டு மறுநாள் குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நிறம் மாறும். கடுகை பொடியாக்கி பசும்பாலுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
இது போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கு எது உகந்ததோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
