பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு - பலரையும் திரும்பி பார்க்க வைத்த இளம் பெண்
Food Shortages
Trincomalee
Sri Lanka Food Crisis
By Vanan
திருகோணமலையில் பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை முன்னெடுத்து வருகிறார் லோகவர்த்தினி என்ற இளம் பெண்.
அவர் தனது கடைக்கும் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் யாசகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
இலவசம் என்று பொறுப்பின்றி செயற்படாமல் இயற்கையான முறையில் தயாரித்த உணவுகளை வழங்கி வருகிறாராம் அவர்.
இவரின் செயற்பாட்டை பலர் கடவுளுக்கு இணையாக ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காணுங்கள்,
