எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா

By Sumithiran Aug 03, 2022 01:44 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

 பதுங்கியிருந்தவர் கண்டுபிடிப்பு

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது.

அல்-ஜவாஹிரி, தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பல்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா | How Us Strike Could Kill Al Qaeda Leader

அல்-ஜவாஹிரி தங்கியிருந்த வீடு

ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணை

அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.

இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம் இலக்கின் மேலே பறந்து செல்லும். லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்து 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும்.ஏவுகணை வெடிக்காது. இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார்.

எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா | How Us Strike Could Kill Al Qaeda Leader

ஆளில்லா விமானம்

முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன.

இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் அல்-கொய்தா தளபதி அபு அல்-கைர் அல்-மஸ்ரி, காரில் சென்றபோது அந்த கார் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா | How Us Strike Could Kill Al Qaeda Leader

தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணை

உறுதிப்படுத்த கால அவகாசம்

அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர்.

எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா | How Us Strike Could Kill Al Qaeda Leader

தாக்குதலின் பின் மேலெழும்பும் தீச்சுவாலை

 முகத்தை புகைப்படம் எடுத்த உளவுத்துறை

அல்-ஜவாஹிரி தனது வீட்டு பல்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கான் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி