பௌத்த வாதத்தின் முன் சரிந்த மார்க்சியம்! தர்ம நீதிமன்றத்தை ஜே.வி.பி. எப்படி எதிர்கொள்ளும்

By Independent Writer May 29, 2026 08:58 PM GMT
Report
Courtesy: பா.பிரியங்கன்

பொதுவாக "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கருத்தியல் இலங்கையின் அரசியல் அமைப்பில் வெற்று மை எழுத்துக்களோடு செத்துக்கொண்டிருக்க, சிறிலங்காவின் தென்னிலங்கை அரசியல் அதிகாரபீடம் மீண்டும் ஒருமுறை பௌத்த பேரினவாதத்தின் காலடியில் குட்டிக்கரணம் அடித்து வீழ்ந்திருக்கிறது.

மாற்றம் என்ற மிகப்பெரும் பிரச்சாரத்துடனும், இடதுசாரிய முற்போக்கு முகமூடியுடனும் அதிகாரக்கதிரை ஏறிய அரச தலையாரியான அநுரகுமார திசாநாயக்க, பௌத்த மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்குப் பணிந்து 1931ஆம் ஆண்டின் பௌத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தப்போவதாகவும், பிக்குகளின் ஒழுக்கப் பிரச்சினைகளைக் கையாள 'தர்ம நீதிமன்றத்தை' மீண்டும் நிறுவப்போவதாகவும் உருக்கமாக பேசி முடித்திருக்கிறார் .

வர்க்கப் போராட்டமும், மதச்சார்பின்மையும் பேசும் ஒரு மார்க்சியப் பின்னணி கொண்ட அரசியல் அமைப்பான jvp , ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சட்ட விலக்களிப்பு வழங்கும் இந்த நகர்வு, ஶ்ரீலங்காவி்ன் நீதித்துறையையும், சமத்துவக் கோட்பாட்டையும் பூர்வாங்கமாகவே கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. 

300 தமிழ் மக்களை காவு கொண்ட 1958 தமிழ் இனப்படுகொலை... அறத்துடன் நின்ற ஈழத் தமிழர்கள்...

300 தமிழ் மக்களை காவு கொண்ட 1958 தமிழ் இனப்படுகொலை... அறத்துடன் நின்ற ஈழத் தமிழர்கள்...

சிவில் சட்டத்திற்கு சவால்

சிறிலங்காவின் அரசியலமைப்பு அதன் 9ஆவது அத்தியாயத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கியதன் விளைவு என்ன?

அது வெறும் ஆன்மீகப் பாதுகாப்பைத் தாண்டி, சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அதிகாரக் கவசத்தை பிக்குகளுக்கு வழங்கியுள்ளது.

சமகாலத்தில் பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய விதமும் இதற்கு அப்பட்டமான சான்றுகள் என்றே கூறமுடியும். உதாரணமாக அனுராதபுரத்தின் மிக உயரிய விகாரையின் முதன்மைப் பிக்கு (பல்லேகம ஹேமரதன தேரர்) ஒரு 14 வயது சிறுமியைத் அத்துமீறல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை மாறாக ஒரு தனியார் வைத்தியசாலையில் சொகுசு அறையில் அனுமதிக்கப்பட்டு, மிக விரைவாகப் பிணையில் விடுவிக்கப்பட்டார் அதே போலவே அண்மைய நாட்களில் 20க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறுபுறம் சட்டவிரோத யானைக்குட்டிகளை விகாரையில் வளர்த்த உடுவே தம்மாலோக தேரர் போன்றவர்கள் சிவில் சட்டத்தை மதிக்கவேயில்லை.

இன்னொருபக்கம் பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றவர்கள் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய போதும், நீதிமன்றத்தை அவமதித்த போதும் அவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் .

இப்படியான பாரிய சிவில் குற்றங்களைச் செய்யும் பிக்குகளை நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்குப் பதிலாக,தர்ம நீதிமன்றங்கள் மூலம் கையாளுவது என்பது, குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவதற்காக அல்ல மாறாக நாட்டின் பொது நீதித்துறையின் கண்காணிப்பில் இருந்து அவர்களைக் காப்பாற்றி, விகாரைகளுக்குள்ளேயே குற்றங்களை மூடிமறைப்பதற்கே ஆகும்.

ஈழக் குழந்தைகளுக்கு எதிரான இனப்படுகொலைப் போர்…

ஈழக் குழந்தைகளுக்கு எதிரான இனப்படுகொலைப் போர்…

தத்துவார்த்த வீழ்ச்சி

ஜே.வி.பி (JVP/NPP) இன் தத்துவார்த்த வீழ்ச்சி 'அபின்' ஆனதா மார்க்சியம்? "மதம் என்பது மனித குலத்திற்கு ஊட்டும் அபின்" என்றார் காரல் மார்க்ஸ்.

ஆனால் இன்று மார்க்சியப் புரட்சி பேசும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) எனப்படும் தேசிய மக்கள் சக்தி, சிறிலங்காவின் பௌத்த வாக்குவங்கிக்காகத் தனது கொள்கைகளை முற்றாக அடகு வைத்துள்ளது.

உண்மையில் ஜே.வி.பியின் வரலாறு என்பது எப்போதும் வர்க்க முற்போக்குவாதத்தை விட சிங்கள பௌத்த தேசியவாதத்தை முன்னிறுத்திய வழி வந்துள்ளது.

கடந்த 1987-89 காலகட்டங்களில் வடகிழக்கு இணைப்பிற்கும், தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கும் எதிராக அவர்கள் ஆயுதம் ஏந்தியதே இதற்கு சாட்சியாகும் இன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, வடக்கு-கிழக்குக்கு வந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் "இனவாதம் பேசக் கூடாது, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று மேடைதோறும் உபதேசம் செய்கிறார்.

ஆனால், கொழும்புக்குத் திரும்பியதும் மகாநாயக்க தேரர்களின் காலடியில் அழுது வடிந்து, அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கிப் பிரத்தியேக நீதிமன்றங்களை அமைக்கச் சம்மதிக்கிறார்.

இது இடதுசாரிகளின் வரலாற்றில் புதிய சாதனை அல்ல அதிகாரத்திற்காக கொள்கைகளை விற்ற அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்றே கூறமுடியும்.

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு

சமத்துவ நீதி

இலங்கை அரசுக் கட்டமைப்பு ஒரு தரப்பினருக்குச் சட்ட விலக்களிப்பை வழங்கும் இந்த வேளையில், கடந்த காலங்களில் இலங்கையின் வடக்கு-கிழக்கில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிழல் அரசு மற்றும் அதன் நீதி நிர்வாகக் கட்டமைப்பை இதனுடன் ஒப்பிடுவது இன்றைய காலத்தேவையாகும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கிய நீதிமன்றங்களும் தண்டனை முறைகளும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன.

அதாவது சட்டத்தின் முன் அனைவரும் சமம் அங்கு மதம், பதவி அல்லது வர்க்க அடிப்படையில் யாருக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை.

அதுபோலவே கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடு இருந்தது பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் அமைப்பின் உயர் தளபதிகளோ அல்லது மதத் தலைவர்களோ ஈடுபட்டால், அவர்கள் உடனடியாகப் பதவி பறிக்கப்பட்டு, பொதுமக்களை விடக் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மிக முக்கியமாக மதச்சார்பின்மையாகும் அதாவது மதத் தலைவர்கள் தங்களைச் சட்டத்திற்கு மேல் நிலைநிறுத்த அங்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் வெறும் காகிதங்களில் எழுதப்பட்ட சர்வதேச மனித உரிமைத் தரங்களின்படி புலிகளின் தண்டனை முறைகள் மிகக் கடுமையானதாக விமர்சிக்கப்பட்ட போதிலும், அங்கு "சட்டத்தின் பேராதிக்கம்" அனைவருக்கும் சமமாகப் பேணப்பட்டது.

ஆனால், உலகிற்கு தங்களை ஜனநாயக நாடு என்று பறை அறைந்துகொள்ளும் இலங்கை அரசானது ஆன்மீகப் போர்வையில் இருக்கும் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசியலமைப்பையே வளைக்கப்படுகிறது.

இனப்படுகொலைக்கான நீதிக்காக நினைவுகளை ஏந்திப் போராடுகிற இனத்தின் குறியீட்டு நாள்

இனப்படுகொலைக்கான நீதிக்காக நினைவுகளை ஏந்திப் போராடுகிற இனத்தின் குறியீட்டு நாள்

சட்டம் சமம் என்பது

இலங்கையின் அனைத்து மதங்களையும் பௌத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டுவந்து, பௌத்த பிக்குகளுக்கு மட்டும் சட்ட விலக்களிப்பு அளிக்கும் ஒரு நாட்டில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களைச் சமத்துவமான குடிமக்களாகக் கருதி வாழ்வது எப்படிச் சாத்தியமாகும் ?

இவ்வாறானதொரு பேரினவாதக் கட்டமைப்பில் சிறுபான்மையினர் வாழ வேண்டிய கருத்தியல் அணுகுமுறை என்ன?

என்பவற்றை விவாதிப்பது தற்போதைக்கு தவிர்க்க முடியாத ஒரு விடயப்பர்பாகும் ஒன்று போலி முற்போக்குவாதத்தை நிராகரித்தல் தென்னிலங்கை சிங்கள மக்களிடையே ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் வெறும் முகமூடி மாற்றங்களே தவிர, பௌத்த பேரினவாத அரசுக் கட்டமைப்பின் ஆழப்பரந்திருக்கும் வேரை அவை ஒருபோதும் அசைக்காது என்பதைச் சிறுபான்மையினர் முதலில் உணர வேண்டும்.

இரண்டாவது அரசியல் மற்றும் சமூக தன்னாட்சி அதாவது பொதுச் சட்டங்கள் பாரபட்சமாக இருக்கும் போது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தங்களின் தனித்துவமான அரசியல், பொருளாதார மற்றும் கல்விசார் கட்டுமானங்களைச் சுயாதீனமாகப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது சர்வதேசப் பொறிமுறைகளை நாடுதல் எப்படியென்றால் இங்ங்கையின் உள்நாட்டு நீதித்துறை முற்றிலும் சிதைந்து, பேரினவாத மயப்பட்டுவிட்ட சூழலில், சிறுபான்மையினர் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு உள்நாட்டு நீதிமன்றங்களை நம்பியிருக்காமல், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐநா பொறிமுறைகளை நோக்கித் தங்களின் அரசியல் நகர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்

முடிவாக இலங்கை ஒரு தூய பௌத்த பேரினவாத நாடு என்பதை தற்போதைய இடதுசாரி அரசாங்கத்தின் நகர்வுகளும், குற்றச்சாட்டுக்குள்ளான பிக்குகள் தப்பி ஓடும் சட்ட ஓட்டைகளும் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.

சட்டம் வெறும் வார்த்தைகளில் மட்டுமே சமத்துவத்தைப் பேசும் இந்த நாட்டில், சிறுபான்மையினர் இன்னும் ஏமாற்று வாக்குறுதிகளை நம்பி அடிமைச்சேவகம் செய்வதை அடிப்பதை நிறுத்திவிட்டு, தங்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் வென்றெடுப்பதற்கான மாற்று அரசியல் பாதையை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026