சிலாபத்திலிருந்து புறப்பட்ட போராட்டகாரர்களுக்கு நீர்கொழும்பில் அமோக வரவேற்பு(படங்கள்)
சிலாபத்தில் இருந்து புறப்பட்ட போராட்டக்காரர்
இரவு 9 மணி அளவில் அவர்கள் நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தை வந்தடைந்தனர். இதன்போது பிரதேசவாசிகள் நூற்றுக்கணக்கானோர் பிரதான வீதியில் ஒன்று திரண்டு அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
கோட்டா கோ கம நோக்கி புறப்பாடு
வருகை தந்த போராட்டக்காரர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் பிரதேசவாசிகளும் போராட்டக்காரர்களும் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதி வழியாக தெல்வத்தை சந்தியில் அமைந்துள்ள கோட்டா கோ கமவை நோக்கி புறப்பட்டனர்.
தெல்வத்தை சந்தியில் வைத்து வாத்திய குழுவினரின் இசையுடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். பின்னர் தெல்வதை சந்தியில் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் சிலர் உரையாற்றினர்.
இதேவேளை,சிலாபத்திலிருந்து வருகை தந்த போராட்டக்காரர்களுக்கு நீர்கொழும்பில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் நாளை காலை நீர்கொழும்பை நோக்கி புறப்படவுள்ளனர்.
