தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு

United Nations Human Right Day United Kingdom
By Sathangani Dec 12, 2023 09:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) 2023 ஆம் ஆண்டிற்கான உலக மனித உரிமைகள் தின நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டனின் பார்நெட் (Barnet) நகரில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி ஐ.நா மனித உரிமைகள் தினத்தை அறிமுகப்படுத்தி 75ஆவது ஆண்டான நடப்பாண்டில் TICயின் மனித உரிமைகள் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணி வரை நடைபெற்றது.

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்


மனித உரிமைகள் தின நிகழ்வு 

அனைவருக்குமான கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி (Dignity, Freedom and Justice for All) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட TICயின் மனித உரிமைகள் தின நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் இலங்கைத் தமிழர்களுக்கே உரித்தான தமிழ் மொழி வாழ்த்து பாடலும் இசைக்கப்பட்டது.

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு | Human Rights Activists Honoring In Tic S Hr Day

நிகழ்வில் பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் கவுன்சிலர் நாகுஸ் நரேந்திரா அவர்களும், சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவருமான மதிப்பிற்குரிய திரேசா வில்லியம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான கலாநிதி அன்டி கிகின்பொட்டம் (Dr Andy Higginbottom) அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவின் இயக்குநர் அன்டி பெய்லி (Mr Andy Bailey) அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அத்துடன் மதத்தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கல்வியலாளர்கள் மற்றும் TIC யின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TICயினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழங்கப்பட்டது.

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம்

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம்


இருவருக்கு விருது 

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இராணுவ அடக்கு முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குநரும் முன்னாள் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான பிரான்சிஸ் ஹரிசன் (Frances Harrison) அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயலாற்றிவரும் ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பாசனா அபேவர்த்த (Bashana Abeyawardane) அவர்களுக்கும் மேற்படி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தின விழா : மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கௌரவிப்பு | Human Rights Activists Honoring In Tic S Hr Day

TIC யின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் இயங்குநருமான மறைந்த வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான வைத்தியர் சிவா தியாகராஜா (Dr Siva Thiagaraja) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் பிரித்தானியாவில் தமிழர் பண்பாட்டு மையம் (Tamil Heritage Centre) ஒன்றை உருவாக்குற்கான தேவை தொடர்பிலான ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதுடன், அதற்கான திட்ட முன்மொழிவும் கோரிக்கையும் நகர மேயரிடம், TIC மற்றும் CCDயின் பண்பாட்டு பிரிவின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்புக் கலைநிகழ்வாக, அலன் பிரதீபன் அவர்களின் மனித உரிமைகள் தொடர்பிலான “றப்” இசையும், இலண்டன் மெய்வெளி அரங்க கலைஞர்களின் “நான் புதைக்கப்பட்டவன்” என்ற சிறப்பு நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் தொண்டர்களுக்கான மதிப்பளிப்பு மற்றும் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு என்பவையும் சிறப்புற இடம்பெற்றன.

இந்த நிகழ்வு TIC யின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன், செயற்பாட்டாளர்களான செல்வன் டிலக்‌ஷன் மனோரஜன் மற்றும் செல்வி சுபமகிசா வரதராசா ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 நாட்களில் காணாமல் போன 12 பேர் : காவல்துறை தலைமையகம் விடுத்த அறிவிப்பு

2 நாட்களில் காணாமல் போன 12 பேர் : காவல்துறை தலைமையகம் விடுத்த அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024