மனித உரிமைகள் ஆணைக்குழு மீது மொட்டு கட்சி எம்.பி பாய்ச்சல்
வன்முறையாளர்களால் தமது வீடுகள் எரிப்பு
வன்முறையாளர்களால் தமது வீடுகள் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டமை தொடர்பாக சுமார் நூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த போதிலும் ஆணைக்குழு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு எம்.பி.க்களிடம் விசாரித்ததா அல்லது தெரியப்படுத்தியதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

பாரபட்சம் காட்டும் மனித உரிமைகள் ஆணைக்குழு
அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இந்த ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுவதாகவும் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் அவர்களின் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.