மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியா இலங்கைக்கு விடுத்த கோரிக்கை
மனித உரிமை பேரவையுடன் (Human Rights Council) இலங்கை (Sri Lanka) மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டன் (Britain) வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் நேற்றைய தினம் (09) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.
மனித உரிமை பேரவை
இந்தநிலையில், ஜெனீவாவில் (Geneva) மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் (09) மனித உரிமை பேரவையுடன் இலங்கை மீண்டும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பிரிட்டனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிவில் சமூகம் துன்புறுத்தப்படுவது கண்காணிக்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது இலங்கையில் சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் நிலத்தகராறு குறித்து சுட்டிக்காட்டபட்டுள்ளது.
அத்தோடு, இந்த நிலத்தகராறு குறித்து தீர்வை காண வேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இலங்கை பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கனடா (Canada) வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |