ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்மட்டகுழு இலங்கைக்கு -கடுமையாக தயாராகும் தீர்மானம்

Human Rights Council Dr Wijeyadasa Rajapakshe Ranil Wickremesinghe Sri Lanka Cardinal Malcolm Ranjith
By Jaso Aug 07, 2022 05:31 PM GMT
Report

ஐ. நா மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழு  இலங்கை விஜயம்

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கான பயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்மட்டகுழு இலங்கைக்கு -கடுமையாக தயாராகும் தீர்மானம் | Human Rights Council To Sri Lanka

அவர்கள் தமது இலங்கை விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர். நீதியமைச்சர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என கர்தினால் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்துவருகிறார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார். இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள், அவர் முக்கிய விடயங்கள் குறித்து அதிபருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளன.

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்மட்டகுழு இலங்கைக்கு -கடுமையாக தயாராகும் தீர்மானம் | Human Rights Council To Sri Lanka

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுசரணை, இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கொழும்பிலும் ஜெனிவாவிலும் சந்தித்து இலங்கை குறித்த புதிய தீர்மானம் தொடர்பாக ஆராய்ந்துள்ளன.

மனித உரிமை பேரவையின் அமர்வு செப்ரெம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் ஏழுவரை இடம்பெறும். இந்த வருட மே மாதம் வரை இலங்கை தொடர்பான முதன்மை குழு முன்னைய தீர்மானத்திற்கு மேலும் இரண்டுவருட கால அவகாசம் வழங்குவது குறித்து ஆராய்ந்து வந்தது.(2022 செப்டம்பர் முதல் 2024 வரை)

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்மட்டகுழு இலங்கைக்கு -கடுமையாக தயாராகும் தீர்மானம் | Human Rights Council To Sri Lanka

 இலங்கை தொடர்பில் கடுமையான தீர்மானம்

எனினும் காலிமுகத்திடலில் – அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்டமை போன்றவை இலங்கை தொடர்பான குழுவினரின் மனமாற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக அவர்கள் இலங்கை தொடர்பான கடுமையான தீர்மானமொன்றை தயாரிக்கவேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த நாடுகள், மனித உரிமை மீறல்களை கவலையளிக்கும்போக்கு என தெரிவித்துள்ளனர். எனினும் முன்னைய தீர்மானத்தின் பல விடயங்கள் புதிய தீர்மானத்தில் இடம்பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026