பேரினவாத அரசின் அடக்குமுறைகள்..! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியான சர்வதேச அறிக்கை

Sri Lanka Army Sri Lankan Tamils Tamils Sri Lanka Government Black Day for Tamils of Sri Lanka
By Thulsi May 23, 2024 12:02 PM GMT
Report

இலங்கையின் (Sri Lanka) உள்நாட்டுப் போரில் இறந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூரும் தமிழர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தி தடுத்து வைத்துள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் போரின் போது தமது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்துள்ள நிலையில், அது உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகங்களையும் மௌனமாக்க முயற்சிக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பணிப்பாளர் எலைன் பியர்சன் ( Elaine Pearson) கூறியுள்ளார்.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் சர்வதேச நடவடிக்கைகள் தேவை என்பதையே இந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை...! பொதுமக்கள் அச்சம்

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை...! பொதுமக்கள் அச்சம்

பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு அழைப்பு

கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலகம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்கு சர்வதேச வழக்குகள் மற்றும் பிற பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பேரினவாத அரசின் அடக்குமுறைகள்..! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியான சர்வதேச அறிக்கை | Human Rights Watch Report About Sl Tamils May 18

இந்நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை இன்று (23) வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நிறைவு தினத்திற்கு முன்னதாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காவல்துறையினர்  நினைவேந்தல் நிகழ்வுகளை சீர்குலைக்க முயன்றனர்.

இதில் ஒரு கட்டமாக திருகோணமலையில் இறுதிப்போரின் முடிவில் பல பொதுமக்கள் உட்கொண்ட பட்டினிச் சூழலின் அடையாளமான கஞ்சியை வழங்கியதற்காக நான்கு பேரை ஏழு நாட்கள் காவலில் வைத்துள்ளனர்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குறித்து வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரையும் ஏனையோர் நிகழ்வுகளில் கலந்து கொள்வதையும் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகளையும் அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

பேரினவாத அரசின் அடக்குமுறைகள்..! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியான சர்வதேச அறிக்கை | Human Rights Watch Report About Sl Tamils May 18

சில இடங்களில் நிகழ்வுகள் தொடர்வதைத் தடுக்க அல்லது மக்கள் அவர்களைச் சென்றடைவதைத் தடுக்க காவல்துறையினர் தலையிட்டது போன்ற சம்பவங்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிட்டுள்ளது

இதேவேளை இலங்கையில் கடந்த காலங்களில் காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் சீர்திருத்தம் அல்லது பொறுப்புக்கூறல் இல்லாத நிலையில் இந்த நடைமுறை பாதுகாப்புப் படைகளுக்குள் வேரூன்றி உள்ளது இந்த ஆண்டு மார்ச் 14 அன்று, ஒரு நபரை இரகசிய காவலில் வைத்து அவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்களை விசாரிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுள்ளதை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பேரினவாத அரசின் அடக்குமுறைகள்..! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியான சர்வதேச அறிக்கை | Human Rights Watch Report About Sl Tamils May 18 

சந்தேகத்துக்குரிய புதைகுழிகளை தோண்டி எடுக்க வேண்டும்

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அளவை ஒப்புக்கொள்வது, உடனடி மற்றும் நம்பகமான விசாரணைகளை மேற்கொள்வது, பாரிய புதைகுழிகளை விசாரிக்க சர்வதேச தொழில்நுட்ப உதவியை நாடுவது, சுதந்திரமான வாதாடும் அதிகாரத்தை நிறுவுவது மற்றும் பயங்கரவாதத் தடை சட்டத்தை தடைசெய்வது என்பன அடங்குவதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் வெளிநாட்டு அரசாங்கங்களும் ஐக்கிய நாடுகளின் முகவர்களும் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் அனைத்து வகையான அந்நியச் செலாவணிகளையும் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பேரினவாத அரசின் அடக்குமுறைகள்..! ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வெளியான சர்வதேச அறிக்கை | Human Rights Watch Report About Sl Tamils May 18

சந்தேகத்துக்குரிய புதைகுழிகளை தோண்டியெடுப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு வெளிநாடுகளில் வழக்குத் தொடருதல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கையர்களை கடுமையான சோதனை செய்தல் என்பன மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இதற்கிடையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த துன்பத்தை ஏற்படுத்தும் செயல்களை கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பியர்சன் கண்டித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் செப்டெம்பர் அமர்வின்போது, இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஆணையை புதுப்பிப்பதும், இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியம் என்றும் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பியர்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை! ரணில் உறுதி

ஓய்வுபெற்ற படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை! ரணில் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025