குப்பை மேட்டுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொலன்னாவ, பொத்துவில்கும்புர - நாகஹமுல்ல குப்பை மேட்டுக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக வெல்லம்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் மண்டை ஓடொன்று, முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள், அத்துடன் கருப்பு தொப்பி மற்றும் மஞ்சள் நிற காற்சட்டை ஆகியவை காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பட்டம் விட்ட சிறுவர்கள் கண்டுபிடிப்பு
குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது, இந்த எச்சங்களைக் கண்டு அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் வெல்லம்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
