ஹங்கேரியில் தவறான வானிலை முன்னறிவிப்பு -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை
தவறான வானிலை முன்னறிவிப்பு
ஹங்கேரியில், தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் தலைவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (20) புனித ஸ்டீபன் தினத்தை கொண்டாட ஹங்கேரியர்கள் தயாராகினர். புனித ஸ்டீபன் தினம் ஒரு தேசிய விடுமுறையாகக் கருதப்படுகிறது, மேலும் அன்றிரவு ஒரு கண்கவர் வானவேடிக்கை நடத்தப்படுகிறது.
வருடாந்திர வானவேடிக்கை நிகழ்ச்சி
அரசால் நடத்தப்படும், வருடாந்திர வானவேடிக்கை நிகழ்ச்சி ஹங்கேரியின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும், அதைக் காண 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தலைநகரான புடாபெஸ்டில் குவிந்துள்ளனர். தலைநகர் புடாபெஸ்டில் 5 கிலோமீட்டர் தொலைவில் டான்யூப் ஆற்றங்கரையில் 240 இடங்களில் இரவில் விளக்கேற்றும் நோக்கில் கடந்த 20ம் திகதி 40,000 மலர்கள் தயார் செய்யப்பட்டன.
பாரிய மழை பெய்யும்
வானவேடிக்கைக்கு தயாரான நிலையில், ஹங்கேரிய தேசிய வானிலை ஆய்வு மையம், நகரை பாரிய மழை பெய்யும் என்றும், பட்டாசு வெடிக்க முடியாது என்றும் முன்னறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி தயக்கத்துடன் இரத்து செய்யப்பட்டது. இதனால் பலர் அதிருப்தி அடைந்தனர்.
இருப்பினும், முன்னறிவிப்பை பொய்யாக்கும் வகையில், மழையுடன் கூடிய புயல் தலைநகரை கடந்து சென்றதால், தலைநகரில் மழை பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. கிழக்கில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்துள்ளதாகவும் ஹங்கேரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹங்கேரி மக்களிடையே எதிர்ப்புகளும் அதிருப்தியும்
தேசிய வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளைச் செய்ய முடியவில்லை என்று ஹங்கேரி மக்களிடையே எதிர்ப்புகளும் அதிருப்தியும் எழுந்தன. தேசிய வானிலை சேவையின் தலைவர்கள் சமுக ஊடகங்களில் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினர்.
ஆனால் புத்தாக்க அமைச்சர் லாஸ்லோ பால்கோவிச், தேசிய வானிலை ஆய்வு மைய தலைவர்களை பதவி நீக்கநடவடிக்கை எடுத்தார்.

