பிரித்தானியாவில் “அர்வென்” புயல்!! செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுவிப்பு
people
britain
arven
By Vanan
பிரித்தானியாவில் அர்வென் என்ற குறியீட்டுப்பெயரிலான புயல் நேற்றிரவு முதல் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசிவருகிறது.
இந்த புயலின் தாக்கம் காரணமாக இதுவரை ஒருவர் பலியான நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மின்வெட்டு போன்ற பாதிப்புகள் தொடர்கின்றன.
கடும் பனிப்பொழிவுடன் அர்வென் புயல் இங்கிலாந்தை தாக்கியுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அவசியமானால் மட்டுமே பயணம் செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வதிவிடங்களுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
அர்வென் புயலின் தாக்கம் இன்றும் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்