வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பெண்: கணவர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
பிரதம நிர்வாக அதிகாரி
பொலனறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின், படுகொலை செய்யப்பட்ட பெண் பிரதம நிர்வாக அதிகாரியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொலன்நறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது
பொலனறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் 42 வயதுடைய பெண் பிரதம நிருவாக அதிகாரி நேற்று முன்தினம் (04) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட பெண்ணின் கணவரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
