மனைவியை தாக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியான கணவன் : சென்றது முறைப்பாடு
கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர், ஜனாதிபதி சட்டத்தரணியான தனது கணவன் தன்னைத் தாக்கி, பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்குவதாகக் கூறி, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது கணவரான ஜனாதிபதிசட்டத்தரணிர் மீது இதுபோன்ற புகார் அளிக்கக் காரணம், தான் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் என்று அந்தப் பெண், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகத்திடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் மகள்கள்
கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த பெண், தனது கணவரான ஜனாதிபதி சட்டத்தரணியைசுமார் 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாகவும், இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிக்கும் 18 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மது அருந்திவிட்டு தாக்குதல்
டிசம்பர் 2023 முதல், தனது கணவர் வீட்டின் மேல் தளத்திலும், தான் வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வருவதாகவும், தனது கணவரின் தாக்குதல்கள் காரணமாக தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தனது கணவர் இரவில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு தன்னை தாக்குவதாகவும், அவரது துன்புறுத்தல் காரணமாக இந்த முறைப்பாட்டை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
