மனைவியைக் கொன்று புதைத்த கணவன் - 02 வருடங்களின் பின் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!
Sri Lanka Police
Death
By Kathirpriya
ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு, அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரிதிமாலியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் சுமார் இரண்டு வருடங்களாக காணாமல் போயுள்ளதாக ரிதிமாலியத்த காவல் நிலையத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து அப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது அவர் வழங்கிய முரண்பாடான வாக்குமூலத்தால் காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மற்றும் பல தகவல்களை இன்றைய மத்திய நேர செய்திகளின் தொகுப்பில் காண்க.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி