கணவன் விட்டுப்பிரிந்த ஆத்திரம் மனைவிக்கு அடித்த ஜாக்பொட் பரிசு
தனது நெருங்கிய தோழியுடன் கணவன் கைவிட்டு சென்ற கடும் கோபத்தில் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பை வாங்கிய பெண்ணுக்கு பெருந்தொகை பணம் கிடைத்து அவரது கோபத்தை தணிய வைத்துள்ளதுடன் பணமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் இருந்த அவருக்கு பெரும் ஆறுதலையும் அளித்துள்ளது.
கொலம்பியாவின் பாரன்குவிலா பகுதியை சேர்ந்த பெயர் குறிப்பிடாத பெண்ணுக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
இக்கட்டான சூழலில் அடித்த அதிஷ்டம்
கணவன் விட்டு பிரிந்த நிலையில் இக்கட்டான சூழலில் தங்கியிருந்த வீட்டையும் இழக்க நேர்ந்துள்ளது.இந்த நிலையில் இரண்டு அதிஷ்ட இலாப சீட்டை வாங்கிய அவர் இரண்டில் இருந்தும் சுமார் 268,000 பவுண்டுகளை பரிசாக வென்றுள்ளார்.
இந்த கொண்டாட்டத்தின் நடுவே, தமது முன்னாள் கணவன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், எனினும் அவரின் வாழ்த்துகளுக்கு நன்றியை மட்டும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணவர் கைவிட்டு சென்ற ஓராண்டு நிறைவு
அதிஷ்ட இலாபத்தில் பெருந்தொகை வென்றுள்ள நிலையில்,கல்வி கட்டணங்களை செலுத்த முடியாத சூழலில் இருந்த மகள் தற்போது பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கற்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது.
ஜனவரி 17ம் திகதி சீட்டை வாங்கிய அந்த நாள், தற்செயலாக தமது கணவர் கைவிட்டு சென்றதன் ஓராண்டு நிறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சராசரியாக மாதம் 800 பவுண்டுகள் ஊதியமாக பெறும் மக்கள் வசிக்கும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், குறித்த பெண்ணுக்கு கிடைத்த பரிசுத் தொகையானது மிகப்பெரிய ஜாக்பொட் என கூறப்படுகிறது.

