தமிழர் பகுதியில் கொடூரம்: கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி பலி
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
Crime
Death
By Thulsi
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.
கணவர் கைது
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி