முல்லைத்தீவு மல்லாவியில் பெரும் துயரம் -கணவன், மனைவி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
mullaithivu
well
mallavi
husband and wife death
By Jaso
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31) பிரதீபன் மாலினி (27) என்பவர்களே உயிரிழந்தவர்களாவார்.
குறித்த இருவரும் திருமணத்திற்கு முன்னர் பிரதேச வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றிய போது திருமணம் செய்துள்ளனர் . திருமணமாகி 10 மாதங்கள் கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி