நான் மீண்டும் வருவேன் : டயானா கமகே சூளுரை
தனது குடியுரிமை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு பதவியிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, (Diana Gamage)மீண்டும் அரசியல் களத்திற்கு வருவதற்கான தனது உறுதியை வெளிப்படுத்தினார்.
இன்று (09) அவர் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்
"நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன்," “நான் சட்டத்தை மதிக்கிறேன். இருப்பினும், நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிப்பேன்,'' என அவர் உறுதியளித்தார்.
பெண்களை மதிக்கத் தெரியாதவர்
எதிர்க்கட்சித் தலைவர் பெண்களுக்கு மரியாதை வழங்குவதில்லை என்றும் கமகே குற்றம் சாட்டினார்.
நான் எப்போதும் அதிபரை ஆதரிப்பேன். ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)மற்றவர்கள் மறைந்திருந்த போது இந்த நாட்டைக் கைப்பற்றினார். நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவேன்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |