நாட்டில் நாளை என்ன நடக்கும் - அமைச்சர் கெஹலியவிற்கு ஏற்பட்டுள்ள அச்சம்
இலங்கையில் நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை.இப்போது எனக்கும் அச்சமாகவே உள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரபுக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் சவாலானது. இந்த சூழ்நிலையை நீங்கள் கவனமாக சிந்திக்க வேண்டும்.
மாத்தளையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய அவரிடம் அரசாங்கத்தில் இருந்து எம்.பி.க்கள் குழுவொன்று வெளியேறுவதாக பரவி வரும் வதந்தி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை சவால் மிக்கது எனவும், இந்த நிலைமை குறித்து நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
தற்பொழுது அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்வது பொருத்தமானது அல்ல எனவும், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
