முன்னாள் அரச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena)தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலக் குரல்கள் இப்போது ஏன் மௌனிக்கப்பட்டுள்ளன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மேலும் ஐந்தாறு மாவட்டங்களில் கட்சி மாநாடுகள் நடத்தப்படும் என்றும், அந்தக் குரல்கள் மீண்டும் ஒலிக்கும் என்றும் கூறினார்.
நாளை மத்திய குழு கூடவுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் இதுவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
