வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதல்வராக விரும்புகிறேன்- சாணக்கியன்
By Independent Writer
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதல்வராகும் ஆசை தனக்கு இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வருகை தந்த சாணக்கியன், ஊடகவியலாளர் பா.நடேசனுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனைத் தெரிவித்தார்.
'கிழக்கை மீட்போம்' என்ற பெயரில் பிள்ளையான் கருணா முன்வைத்துவரும் பிரதேசவாதம் தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.
'வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் நான் முதலமைச்சராவது இது போன்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்' என்றும் அவர் தெரிவித்தார்.
சாணக்கியனின் முழுமையான செவ்வி:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்