தேடிவந்த பதவியை தட்டிக் கழித்த முன்னாள் அமைச்சர்
gotabaya
Bandula Gunawardena
Finance Minister
By Sumithiran
நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதனை நிராகரித்ததாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்க வேண்டாம் என தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினமானது எனவும் இவ்வாறான சூழலில் பொறுப்புக்களை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் சீர்குலைந்து, நாடாளுமன்றம் இந்த யதார்த்தத்தைப் புரிய வைத்தாலும், இந்த யதார்த்தத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி