ஆதாரங்களை சமர்ப்பித்தால் பதவியில் இருந்து விலகுவேன்: சபையில் சிறீதரன் அதிரடி

Sri Lankan Tamils Parliament of Sri Lanka S Shritharan MP Chamara Sampath Dassanayake
By Sathangani Nov 08, 2025 07:46 AM GMT
Report

நான் சொத்துக்கள் குவித்து வைத்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் என்மீது  சட்டநடவடிக்கை எடுத்து எனது பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.

இன்றைய (08.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக குறிப்பிட்டு உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் (Chamara Sampath Dassanayake) எனக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனது தேசத்து மக்கள் சார்ந்து பொது நலன் மற்றும் மக்கள் நலனில் கவனம் எடுத்து எனது முடிவுகளை மிகத் தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன். எனது கட்சிக்காகவோ, வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எனது முடிவுகளை நான் மாற்றிக்கொள்ளவில்லை.

எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை, பிரயோகிக்கவும் முடியாது என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் நிரூபித்துள்ளேன்.

சிவில் புத்தி பெரமுன என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக கடந்த ஜூலை மாதம் முறைப்பாடு செய்யப்பட்டதாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்வையிட்டு இருந்தேன்.என தெரிவித்தார்.

செய்திகள் வெளிவந்த பின்னர் வெளிப்படையான விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு கூறியிருந்தேன். இன்று 3 மாதங்கள் ஆகியும் நிதி குற்றப்புலனாய்வு பிரிவால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை.

எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களது பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாகக் கேட்கிறேன்.

எனது பெயரிலோ, எனது சிபாரிசிலோ கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏதும் பெற்றிருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். 

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றிய போது அவர் ஒரு தமிழ் பெண் அதிபரை முழங்காலில் இருத்தி வைத்து விசாரித்த ஒரு மனநோயாளி என்பதையும் தான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

உடனடி விசாரைணை நடத்தி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பட்சத்தில்  என்மீது சட்ட நடவடிக்கை எடுத்து என் பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதம் தெரிவிப்பதுடன் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதிகளை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய அநுர!

முன்னாள் ஜனாதிபதிகளை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பிய அநுர!

பாடசாலை மாணவர்களை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் : அநுர அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் : அநுர அதிரடி அறிவிப்பு

பாதீட்டில் தவிர்க்கப்பட்ட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

பாதீட்டில் தவிர்க்கப்பட்ட தமிழ் மக்களின் காணி விடுவிப்பு : சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024