விடுதலைப் புலிகளின் தமிழீழ கனவை நனவாக்க இடமளிக்க மாட்டேன் : நாமல் பகிரங்கம்
13th amendment
SLPP
Namal Rajapaksa
sl presidential election
By Sathangani
விடுதலைப்புலிகள் அன்று கோரிய தமிழீழக் கனவு நனவாக ஒருபோதும் இடமளியேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் (Avissawella) நேற்று (11.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு, கிழக்கு இணைப்புக்கு சில கட்சிகள் கொள்கை ரீதியில் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
மாகாண சபைகளுக்கு அதிகாரம்
நாம் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம். மாகாண சபைகளுக்கு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம்.
அனைத்து மக்களினதும் மதம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும்.
முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்