கோட்டாபய பதவி விலக இதுவே காரணம்: நாமல் பகிரங்கம்
கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை நிறுத்துவதற்கும் மின்சாரத் தடைகளை நிறுத்துவதற்கும் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) அரசாங்கம் போதிய நிதி மற்றும் நடவடிக்கைகளை வழங்கியதாக ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் (Avissawella) நேற்றையதினம் (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரிசை யுகம்
வரிசை யுகத்தை பலரும் தீர்த்துள்ளதாக தெரிவித்து வரும் நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாமல் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அதன் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு காரணங்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபயவின் பதவி
உமா ஓயா நீர்மின்சார வளாகம் மற்றும் சம்பூர் மின் உற்பத்தி நிலையம் என்பன நல்லாட்சி அரசாங்கத்தினால் குறித்த காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இந்த திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைத்ததாகவும், இறுதியில் அந்த பழி கோட்டாபயவின் நிர்வாகத்தின் மீது விழுந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |