அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை: சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Cricket Sri Lanka Cricket Sri Lanka New Zealand T20 Cricket
By Shalini Balachandran Feb 25, 2026 07:13 PM GMT
Report

உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் தலைவர் இலங்கைக்கு விஜயம்

இங்கிலாந்து கிரிக்கெட் தலைவர் இலங்கைக்கு விஜயம்

இலங்கை அணி

அந்த அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 32 ஓட்டங்களையும், அதிரடியாக விளையாடிய மிட்செல் சென்ட்னர் 47 ஓட்டங்களையும் மற்றும் கோல் மெக்கொன்சி 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஸன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை: சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் | Sl Vs Nz T20 World Cup Super 8 Loss

169 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் (31) மற்றும் துனித் வெல்லாலகே (29) ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றனர்.

இந்தத் தோல்வியின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி உத்தியோகபூர்வமாக இழந்துள்ளமை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரி20 உலககிண்ண தொடர் : சிம்பாப்வே அணியை துவம்சம் செய்த மேற்கிந்தியத்தீவுகள்

ரி20 உலககிண்ண தொடர் : சிம்பாப்வே அணியை துவம்சம் செய்த மேற்கிந்தியத்தீவுகள்

ரி 20 உலககிண்ண தொடர் : இந்திய அணியை சுருட்டியது தென்னாபிரிக்க அணி

ரி 20 உலககிண்ண தொடர் : இந்திய அணியை சுருட்டியது தென்னாபிரிக்க அணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026