ஈழத்தமிழர் உரிமைகள் - அகதி நலன் குறித்து தமிழக முதல்வருக்கு பாஸ்கரன் கந்தையா கோரிக்கை
ஈழத்தமிழர் நலன், தமிழக அகதி முகாம்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் தமிழினத் துயரத்தை நினைவுகூர்ந்து முதலமைச்சர் ஆற்றிய உரைகள் உலகத் தமிழர்களிடையே ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக இதன்மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த மனுவில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில்,
ஈழத்தமிழர் பிரச்சினை
“உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்கும் அவரது தலைமையிலான அரசுக்கும் வாழ்த்துகள்.

தாய் தமிழக மக்களின் பேராதரவால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய அரசு, ஈழத்தமிழர் பிரச்சினைகளில் மனிதநேய அணுகுமுறையுடன் செயல்படுமென நம்பிக்கை நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் இன்னும் பல்வேறு அடிப்படை வசதியின்மைகள், வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
அதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையும் இடையே தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |