கபில சந்திரசேன கொலை விசாரணையில் உள்நுளையும் FBI

CID - Sri Lanka Police Supreme Court of Sri Lanka Kapila Chandrasena
By Dharu May 27, 2026 01:15 AM GMT
Report

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியைத் திறந்து, அதிலுள்ள விபரங்களை ஆராய்வதற்காக அமெரிக்காவின் பிரதான புலனாய்வு அமைப்பான பெடரல் விசாரணைப் பணியகத்தின் உதவி  கோரப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவால் நேற்று (26.05.2026) கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்.பி.ஐ அமைப்புக்கு இது குறித்து மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அமைய, அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆலோசனைகளைத் தொடர்ந்து கைபேசி தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

மரண பரிசோதனை

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான நீதிவான் விசாரணை மற்றும் மரண பரிசோதனை சாட்சிப்பதிவுகள் ஐந்தாவது நாளாகவும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கபில சந்திரசேன கொலை விசாரணையில் உள்நுளையும் FBI | Fbi To Intervene In Kapila Murder Investigation

இதன்போது மரண பரிசோதனைக்கான சாட்சியங்களை வழங்குவதற்காக இரு சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

அவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக சாட்சியங்களைப்பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அவர்கள் இருவரும் தத்தமது நீதிமன்றப் பணிகள் காரணமாக நேற்றைய தினம் சாட்சியமளிக்கச் சமூகமளிக்கவில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், அடுத்த சாட்சிப்பதிவு தினத்தில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்டு, 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளான அவ்விருவருக்கும் உத்தியோகபூர்வ அழைப்பாணைகளை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

கபில சந்திரசேனவின் மரணம் : நாமலின் அரசில் முறையான விசாரணையாம்

கபில சந்திரசேனவின் மரணம் : நாமலின் அரசில் முறையான விசாரணையாம்

இரு சட்டத்தரணிகளுக்கும் அழைப்பாணை

இதன்போது குறுக்கிட்ட நீதிவான், இந்த மரண விசாரணையில் இதுவரை 18 சாட்சிகளிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ அழைப்பாணைகளும் இன்றி, காவல்துறையின் அறிவித்தலுக்கு அமைவாகவே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

கபில சந்திரசேன கொலை விசாரணையில் உள்நுளையும் FBI | Fbi To Intervene In Kapila Murder Investigation

அவ்வாறிருக்கையில், 19 மற்றும் 20ஆம் இலக்க சாட்சிகளுக்கு மாத்திரம் அழைப்பாணைகளை கோருவது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், தமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டால் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கத் தயாராக உள்ளதாக அச் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிவான், முந்தைய 18 சாட்சிகளைப் போன்றே இவர்களுக்கும் அதே நடைமுறையைப் பின்பற்றிச் சாட்சியமளிக்க அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், இரு சட்டத்தரணிகளுக்கும் அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தார்.

இதன்படி விசாரணையின் போது, கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகப் பிணையாளியாக முன்னின்றிருந்த இந்திக ரத்நாயக்க என்பவரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025