அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு
2027ஆம் ஆண்டு ஜனவரியில் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 65,000 ரூபாயாகவும் வைத்தியர்களின் ஆரம்ப சம்பளம் 94,000 ரூபாயாகவும் அதிகரிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகவெரட்டியவில் நேற்று (11) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்டம்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அரசாங்கத்தின் முதல் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றொரு சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்படும்.

அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும், அரசாங்க சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியமாகும்.
கிராம உத்தியோகத்தர்கள், பிரிவெனா நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |