புத்தளத்தில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
Accident
Death
Train
By Sindu
புத்தளம் - வென்னப்புவ, பொரலெஸ்ஸ பகுதியில் உள்ள கிராகர தொடருந்து கடவையில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (11) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற தொடருந்து மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
விபத்தில் உயிரிழந்தவர் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்