சற்றுமுன் மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, இன்றைய தினம் (12) கொழும்பு நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.
கிருலப்பனையில் தனது இல்லத்தில் இருந்த போது ஏற்பட்ட இதய பாதிப்பு பிரச்சினை காரணமாக இன்றைய தினம் (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவப் பரிசோதனை
தற்போது மகிந்த ராஜபக்சவுக்குச் முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் பலரைக் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரைப் பார்ப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இன்று காலை திடீரென ஏற்பட்ட இந்த உடல்நலக்குறைவு காரணமாக அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மொட்டுக்கட்சியின் சில தரப்புக்கள் மகிந்தவின் உடல்நல விவகாரம் குறித்த கருத்துக்கக்களை வதந்திகள் என மறுத்து வருகின்றன.
இந்நிலையில் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்டு எமது ஊடகப்பிரிவு வினவியபோது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவிடயத்தை உறுதிப்படுத்தினார்.
மேலும் இந்த விடயத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி சானாகவும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |