நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்படும் மகிந்த கஹந்தகம
Central Bureau of Investigation
Drugs
Court of Appeal of Sri Lanka
By Sindu
'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகி ந்த கஹந்தகம, நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி விசாரணைகளுக்கு அமைவாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மருத்துவப்பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மிரிகான பகுதியில் கைது
குறித்த சந்தேக நபர் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் கடந்த 05ஆம் திகதி இரவு மிரிகான பகுதியில் உள்ள உணவகத்திற்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் இருவர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்