தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார்

IBC Tamil Jaffna United Kingdom
By Independent Writer Aug 12, 2026 02:16 PM GMT
Report

IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...

தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், கிராமிய மொழிநடையையும், மண்ணின் மண்வாசனையையும் உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன் காலமானார்.

‘அம்மான்’ என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல. தாயகத்தின் கிராமிய சமூகத்தில், பெரும் விவசாயிகளாகவும், வயது முதிர்ந்த பின்னரும் சமூகத்தில் ஆளுமையுடன் மதிப்புடன் திகழ்ந்தவர்களையும் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்த பாரம்பரியப் பெயராக ‘அம்மான்’ விளங்கியது.

விமானம் மாற்றப்பட்ட விவகாரம் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

விமானம் மாற்றப்பட்ட விவகாரம் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

தனித்த அடையாளம்

அந்தப் பெயருக்கே ஐரோப்பியத் தமிழர் மத்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர் பொன். ஈஸ்வரன். கலையோடு பிறந்த அற்புதமான கலைஞராகத் திகழ்ந்த அம்மான், தனது இளமைக்காலங்களில் பெண்வேடம் ஏற்று மேடைகளில் சிறப்பாக நடித்ததுடன், வில்லிசை, குறும்படங்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு கலைத் தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார் | Ibc Tamil Amman S Golden Iswaran Passed Away

தாயகத்தின் மீதும், தாயக மக்களின் மீதும், தலைவன் மீதும் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த அவர், தனது கலைப் படைப்புகளிலும் பேச்சிலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.

குறிப்பாக IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியில் அவரது இயல்பான நடைமுறைப் பேச்சும், கிராமிய நகைச்சுவையும், தாயகத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்த உரையாடல்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவரது பேச்சு நடையை ரசித்த இளைய தலைமுறையினர், வீட்டில் தமது பெற்றோருடன்கூட அம்மானின் பாணியில் பேசும் அளவுக்கு அவரது பாத்திரமும் பேச்சுவழக்கும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. காலப்போக்கில் மறைந்து வரும் பழம்பெரும் கிராமியச் சொற்களைத் தேடிப்பிடித்து, அவற்றை தனது நிகழ்ச்சிகளில் இயல்பாகப் பயன்படுத்தியதில் அம்மான் பொன். ஈஸ்வரன் தனித்துவமானவர்.

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!

‘அம்மான்’ பொன். ஈஸ்வரன்

தாயகத்தின் குச்சுக்கிராமங்களின் பேச்சுமொழி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மண்ணின் மண்வாசனையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

வில்லிசை முதல் மேடை நாடகங்கள் வரை நீண்ட அவரது கலைப்பயணம், இறுதியில் IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் ஊடாக புதிய தலைமுறையினரிடமும் சென்றடைந்தது.

IBC தமிழை இறுதிவரை ஆத்மார்த்தமாக நேசித்த அம்மான் பொன். ஈஸ்வரனின் மறைவு, தாயகக் கலைத்துறைக்கும், கிராமியக் கலை மரபுக்கும், அவரை நேசித்த தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

தனது பேச்சால் சிரிக்க வைத்தும், தனது கலை மூலம் தாயகத்தை நினைவூட்டியும், மறைந்து வரும் கிராமியச் சொற்களையும் வாழ்வியலையும் தனது குரலால் பதிவு செய்தும் சென்ற ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன், இனி நினைவுகளில் மட்டுமே வாழும் ஒரு அழியாத கலைக் குரலாக இருப்பார்.

அவரது மறைவுக்கு IBC தமிழ் குடும்பமும், உலகத் தமிழர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026